Posts

Mushroom Kurma | காளான் குருமா

Image
  காளான் குருமா | மஸ்ரூம் குருமா மழை காலங்களில் வளரும் பூஞ்சை இனத்தைச் சார்ந்தது தான் காளான். பல நாட்டவர் விரும்பி உண்ணக்கூடிய காளானில்   எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்திருந்ததால்   முற்காலத்தில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளின் உணவாக இருந்தது .இறைச்சிக்கு இணையான ஒரு உணவுப்பொருள் காளான். 100 கிராம்  காளானில் 35 கிராம் புரதச்சத்து உள்ளது. இந்த காளானை உணவில் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம், இதயநோய், மலச்சிக்கல் மற்றும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய காளானை நாம்   ஏதாவது வகையில் காளானை உணவில் சேர்த்து நாம் ஆரோக்கியமாக வாழலாம்.  அந்த வகையில்  நாம் வழக்கமாக வெஜிடபிள் குருமா, உருளை குருமா செய்திருப்போம் . இப்போது வித்தியாசமாக  அதிக சத்துக்கள் நிறைந்த காளான்  குருமா   எப்படி   செய்வதென்று பார்ப்போம். இந்த  காளான் குருமாவை  சப்பாத்தி, இட்லி, தோசை தொட்டு சாப்பிடலாம். காளான் குருமா செய்ய தேவையான பொருட்கள்   பட்டை -  2 துண்டு  லவங்கம் - 4  சோம்பு -1/2 டீஸ்பூன்  இஞ்சி பூண்டு விழுது - டீஸ்பூன்  பெரிய வெங்காயம் - 1  எண்ணெய் - 2 தேக்க

கேழ்வரகும், சிகப்பு அரிசி அவல் புட்டு

Image
 கேழ்வரகும், சிகப்பு அரிசி அவல் புட்டு|  Ragi red rice Aval Puttu புட்டு என்பது ஒரு வகையான சிற்றுண்டி வகையைச் சேர்ந்த ஒரு உணவு. இந்த உணவை நீராவியில் வைத்து வேக வைப்பது வழக்கம் அப்படி செய்வதனால் நம் சாப்பிடுவதற்கு சுவையாகவும்  ஜீரணிக்க எளிதாகவும் இருக்கும்.  இந்த புட்டானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக இருக்கின்றது  இதில்  இரும்புசத்து, நார்சத்து  மேலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள்  அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும். புட்டு பலவகை  உள்ளன  அதில் நாம இப்போ கேழ்வரகும் சிகப்பு அரிசி அவலும் கலந்த ஒரு புட்டு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். கேழ்வரகு சிவப்பு அரிசி அவலும் கலந்த புட்டை எப்படி செய்யறது?  கேழ்வரகும், சிகப்பு அரிசி அவல் புட்டு  தேவையான பொருட்கள்: கேழ்வரகு - 1 கப் சிவப்பு அரிசி அவல் - 1 கப்  வெல்லம் - 1 கப் தேங்காய் துருவல் - 1 கப்  ஏலக்காய் - 2 நெய் -2 டீஸ்பூன் தொடர்ந்து பாருங்கள்  அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள்  இந்த வல்லபா சமையல் சேனலில். மேலும் வல்லவா சமையல் YouTube சேனலை பார்ப்பதற்கு கீழே உள்ள link - ஐ சொடுக்கவும். Y

பாசி பருப்பு பாயாசம்|Pasi Paruppu Payasam

Image
சத்துக்கள் நிறைந்த பாசி பருப்பு பாயாசம்| Pasi Paruppu Payasam தென்னிந்திய மக்களுக்கு விருப்பமான ஒரு ரெசிபியாகும். தங்கள் வீடுகளில் விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவான  இந்த பாயாசம் செய்யாமல் இருக்க மாட்டார்கள்.அதிலும் பாசிப்பருப்பு, தேங்காய் துருவல், மணக்க மணக்க நெய், வெல்லம், அலங்கரிக்க நட்ஸ் சேர்த்து பரிமாறினால் எப்படி இருக்கும்..! என்னங்க சொல்லும் போதே நாவில் எச்சில் வருகிறதா அப்போ பாசி பருப்பு பாயாசம் செய்ஞ்சு பார்த்திட வேண்டியதுதான். பாசி பருப்பு பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்    பாசிப் பருப்பு -1கப்  வெல்லம் - 1கப்  சேமியா -1/2 கப்  பால் -200 ml நெய் -தே.அளவு  முந்திரி -10  தொடர்ந்து பாருங்கள்  அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள்  இந்த வல்லபா சமையல் சேனலில். மேலும் வல்லவா சமையல் YouTube சேனலை பார்ப்பதற்கு கீழே உள்ள link - ஐ சொடுக்கவும். YouTube Channel : Vallabha Samayal

கேரட் கீர் | Carrot Kheer

Image
குழந்தைகளுக்கு பிடித்த கேரட் கீர் | favorite carrot kheer for kids பெரும்பாலும் கேரட் என்றே குழந்தைகளுக்கு ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.மனிதர்களின் உணவில் மிகவும் முக்கியப் பங்காற்றும் இந்தக் கேரட் உடல் நலனுக்கு மிக உகந்ததாகப் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும்  கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. அடிக்கடி உண்ணுதலினால் உடம்பில் நல்ல இரத்தம் உண்டாகிறது இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கேரட்டை பொரியல், வறுவல்,  இனிப்பு உணவுகள் செய்யவும், குழம்பு,பிரியாணி போன்ற உணவுகளில் சேர்த்து இருக்கோம். ஆனால் இப்போ கேரட் கீர் எப்படி செயவது பார்ப்போம். கேரட் கீர் செய்ய தேவையான பொருட்கள்  வேகவைத்த கேரட்  - 3 பால் -400 ml நெய் - தே. அளவு  சர்க்கரை - தே. அளவு  முந்திரி -10 பாதம் -10 ஏலக்காய் -1 தொடர்ந்து பாருங்கள்  அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள்  இந்த வல்லபா சமையல் சேனலில். YouTube Channel : Vallabha Samayal

பச்சரிசி உப்புமா | Pacharisi Uppuma

Image
பச்சரிசி உப்புமா | Pacharisi Uppuma உப்புமா என்றாலே  பெரிதும் அனைவரும் விரும்புவதில்லை,  ஏனென்றால் உப்புமாவை ரவை அல்லது சேமியா பயன்படுத்தி செய்கின்றனர் இதன் சுவையை பெரும்பாலும் மக்கள் விரும்புவதில்லை இதிலிருந்து மாறுபட்டு பச்சரிசியில் உப்புமாவை வித்தியாசமான முறையில் நாம இப்ப செய்யலாம்  அனைவரும் விரும்பி சாப்பிடலாம் காலையோ அல்லது மாலையோ இந்த சிற்றுண்டி வகை நாம எடுத்துக்கொள்ளலாம் இந்த பச்சரிசி உப்புமாவை வெகு சீக்கிரத்திலேயே சுவையாகவும் எளிமையாகவும் நாம தயார் பண்ணலாம்.  பச்சரிசி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்  பச்சரிசி  - 1 கப்  வெங்காயம் - 1 கடலை பருப்பு -1 ஸ்பூன்  உளுந்து -1 ஸ்பூன்  வரமிளகாய் -3 கடுகு - 1/2 ஸ்பூன்  சீரகம் - 1/2 ஸ்பூன்  உப்பு - தே.அளவு  இஞ்சி - 1 துண்டு  கறிவேப்பிலை - சிறிதளவு தொடர்ந்து பாருங்கள்  அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள்  இந்த வல்லபா சமையல் சேனலில். மேலும் வல்லவா சமையல் YouTube சேனலை பார்ப்பதற்கு கீழே உள்ள link - ஐ சொடுக்கவும். YouTube Channel : Vallabha Samayal

சேமியா கிச்சடி/semiya kichadi

Image
 சேமியா கிச்சடி/semiya kichadi சேமியா கிச்சடி.  எல்லோருக்கும் பிடித்த மாதிரி சேமியாவில்  சிறிதளவு மசாலா சுவையுடன் காய்கறிகளை சேர்த்து உப்புமா போல செய்வதுதான் நாமம் சேமியா கிச்சடி என்று சொல்கிறோம், இதை எல்லோரும் விரும்பி சாப்பிடுற வகையில் நாமும் ரொம்ப சுவையா  மணமா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.  சேமியா உப்புமாவை விட  சேமியா  கிச்சடியில் காய்கறிகளை சேர்த்து செய்தால் குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை ரொம்பவே விரும்பி சாப்பிடுகின்றனர்.  அந்த வகையில் நாம இப்போ சேமியா  கிச்சடி எப்படி  எல்லோருக்கும் பிடித்த மாதிரியும் எளிமையாகவும் சீக்கிரத்தில் செய்யலாம் என்பதை பார்ப்போம். சேமியா கிச்சடி தேவையான பொருட்கள்  ரவை - 2 கப்  கடலை பருப்பு - 1 ஸ்பூன்  உளுத்த பருப்பு - 1 ஸ்பூன் மஞ்சள் - 1/2 ஸ்பூன் கடுகு - 1/2 ஸ்பூன் சீரகம் - 1/2 ஸ்பூன் பெரு சீரகம் - 1/2 ஸ்பூன் பட்டை - 1 லவங்கம் -3 உப்பு - தே .அளவு  நெய் - தே .அளவு  எண்ணெய்  - தே .அளவு  தொடர்ந்து பாருங்கள்  அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள்  இந்த வல்லபா சமையல் சேனலில்.  மேலும் வல்லவா சமையல் YouTube சேனலை பார்ப்பதற்கு கீழே உள்ள link - ஐ சொடுக்கவும். Yo

சக்கரை பொங்கல் | Chakkarai Pongal

Image
கோவில் சக்கரை பொங்கல் | Chakkarai Pongal in Temple style கோவில் சக்கரை பொங்கல், சக்கரைப் பொங்கல் ஆனது ஒரு இனிப்பான ஒரு உணவு.  பொதுவாக கோயில்களில் நடக்கக்கூடிய விசேஷங்களுக்கும், திருவிழாக்களுக்கும்  பிரசாதமாக எல்லா நேரங்களிலும் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இப்ப நாம  சக்கரை பொங்கலை ரொம்ப அழகா   சுவையாக எளிமையாக  செய்வதை இந்தப் பக்கத்தில் பார்க்கலாம். சக்கரை பொங்கல் தேவையான பொருட்கள்  பச்சரிசி -  ஒரு கப் பயத்தம் பருப்பு -  அரை கப் வெல்லம் -  இரண்டு கப்  நெய் -  தேவையான அளவு ஏலக்காய் பொடி -   சிறிதளவு பசும்பால் -  ஒரு கப் முந்திரி -  6 அல்லது 7 முந்திரி தொடர்ந்து பாருங்கள்  அறு சுவையும் மணமும் கலந்த உணவுகள்  இந்த வல்லபா சமையல் சேனலில். மேலும் வல்லவா சமையல் YouTube சேனலை பார்ப்பதற்கு கீழே உள்ள link - ஐ சொடுக்கவும். YouTube Channel -  Vallabha Samayal