Mushroom Kurma | காளான் குருமா
காளான் குருமா | மஸ்ரூம் குருமா மழை காலங்களில் வளரும் பூஞ்சை இனத்தைச் சார்ந்தது தான் காளான். பல நாட்டவர் விரும்பி உண்ணக்கூடிய காளானில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்திருந்ததால் முற்காலத்தில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகளின் உணவாக இருந்தது .இறைச்சிக்கு இணையான ஒரு உணவுப்பொருள் காளான். 100 கிராம் காளானில் 35 கிராம் புரதச்சத்து உள்ளது. இந்த காளானை உணவில் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை நோய் ,ரத்த அழுத்தம், இதயநோய், மலச்சிக்கல் மற்றும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய காளானை நாம் ஏதாவது வகையில் காளானை உணவில் சேர்த்து நாம் ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் நாம் வழக்கமாக வெஜிடபிள் குருமா, உருளை குருமா செய்திருப்போம் . இப்போது வித்தியாசமாக அதிக சத்துக்கள் நிறைந்த காளான் குருமா எப்படி செய்வதென்று பார்ப்போம். இந்த காளான் குருமாவை சப்பாத்தி, இட்லி, தோசை தொட்டு சாப்பிடலாம். காளான் குருமா செய்ய தேவையான பொருட்கள் பட்டை - 2 துண்டு லவங்கம் - 4 சோம்பு -1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - டீஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 எண்ணெய் - 2 தேக்க